-கிரான் நிருபர்-
பயன்படுத்த முடியாத நிலையில் மாறி வரும் பயணிகள் பேருந்து தரிப்பிடங்களால் பொது மக்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் கோறளைப்பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கிரான் மற்றும் கும்புறுமூலை சந்தி ஆகிய இடங்களில் கடந்த காலங்களில் மாகண சபை நிதியில் அமைக்கப்பட்ட பயணிகள் தரிப்பிடங்கள் (நிழல் குடைகள்) தற்போது மேல் கூரைகள் மற்றும் இருப்பிடங்கள் சேதம் அடைந்து மழை நேரத்திலோ அல்லது வெயில் காலத்திலோ பேருந்துக்காக காத்து இருக்கையில் இருக்க முடியாத நிலையில் உள்ளது.
மழை காலங்களில் பக்கத்தில் உள்ள கடைகளில் ஒதுங்கும் போது துர பிரயாணம் செய்யும் பயணிகள் குறித்த பேருந்தினை தவற விடுவதாகவும் பயணிகள் கவலை வெளியிடுகின்றனர் .
குறித்த பேருந்து தரிப்பிடங்களை சம்மந்தபட்ட திணைக்களங்கள் கவனத்தில் கொண்டு திருத்தி தருமாறு கேட்டுகொள்வதுடன்.

