பேருந்துகளில் அதிக சத்தத்துடன் இயங்கும் கேசட் இயந்திரங்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பேருந்தின் உள்ளே பெரும் சத்தம் காரணமாக பேருந்தில் பயணித்த மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் இடையூறுகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அதிக சத்தத்துடன் இயங்கும் பேருந்துகளில் உள்ள கேசட் இயந்திரங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், போக்குவரத்து பொலிஸாருக்கு அதனை கையாளும் வாய்ப்பு இருப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பேருந்துகளினால் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் குறைப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையும் சுற்றாடல் அமைச்சும் இணைந்து ஒழுங்குபடுத்தும் வேலைத்திட்டமொன்றை தயாரிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.