முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் பகுதியில் நேற்று புதன் கிழமை பெண் ஒருவரை பொலிஸார் தாக்கியதில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
குறித்த பெண் அவரது மகன் பேரக் குழந்தை ஆகியோர் உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு பேருந்தில் ஏறுவதற்காக சென்றுள்ளனர்.
இதன்போது பாரதிபுரம் கிராம அலுவலர் அலுவலகத்தில் இருந்து வந்த இரு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் வந்த அவர்களை மறித்த போது மறித்த இடத்திலிருந்து 20 மீற்றர் தள்ளி மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர்.
இதேவேளை சம்பவ இடத்திலிருந்து பொலிஸார் உடனடியாக வெளியேறி காயமடைந்த பெண் மற்றும் அவரது மகன் பேரக்குழந்தை மோட்டார் சைக்கிள் என்பவற்றை அவ்வாறே விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.