பண்டாரவளை, துல்கொல்ல பிரதேசத்தில் இன்று புதன் கிழமை பெண் ஒருவர் பேருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
மகுல் எல்ல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்திலிருந்து இறங்கி, பேருந்தின் முன்பாக வீதியைக் கடக்கச் சென்ற போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இதன்போது பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.