பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்படுகிறது .
இதுவரை 3,665 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தக் கொடுப்பனவுக்கு 147,628 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 25,000 மற்றும் 50,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு காணி உரிமை அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்