கொம்பனித்தெரு சித்தம்பலம் கார்டினர் மாவத்தைக்கு அருகில் உள்ள பெரே வாவியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று காணப்படுவதாக 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், உயிரிழந்தவர் 45 தொடக்கம் 50 வயதுக்கு இடைப்பட்டவர் என்பதுடன் 05 அடி 03 அங்குல உயரம் கொண்ட ஆண் எனவும், வெளிர் நீல நிற அரை கை, செக் சேட் மற்றும் நீல நிற நீளமான பொட்ஹம் காற்கட்டையும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், நீதவான் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.
கொம்பனித்தெரு பொலிஸார் சடலம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.