-யாழ் நிருபர்-
இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று பகுதியில் இன்றையதினம் புதன் கிழமை 200 லீட்டர் கோடா மற்றும் 5 லீட்டர் கசிப்பு ஆகியவற்றுடன் சந்தேகநபர் காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியை சேர்ந்த 47 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்