வத்தேகம, மடுகலை நெல்லிமலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தாயான, சண்முகம் விஜயலட்சுமி தேநீர் பருகிக்கொண்டிருந்த போது மரமொன்று முறிந்து விழுந்தத்தில் மரணமடைந்துள்ளார்.
மேலும், அவ்விடத்தில் இருந்த மற்றுமொரு தொழிலாளி கால் முறிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த மரத்தை வெற்றி அகற்றுவதற்காக தோட்ட நிர்வாகத்தினால் நான்கு தொழிலாளர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.தொடர்ந்து அவர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி விட்டு தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அவர்களுள் இரண்டு பிள்ளைகளின் தந்தையான மணிமுத்து இராஜரட்ணம் ( வயது – 51) நேற்று வியாழக்கிழமை மரணமடைந்துள்ளார்.