மோட்டார் சைக்கிள் ஒன்றில் பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் பயணித்த பெண்ணை சோதனையிட்டபோது, குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை கன்னத்தில் அறைந்தது விட்டு, மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு தப்பிச்சென்றுள்ளார்.
போக்குவரத்து பிரிவில் கடமை புரியும் கான்ஸ்டபிள் ஒருவர் ஜா -எல பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் கடமையில் இருந்து இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குறித்து பெண் ‘நான் காவல் துறையினருக்கு பயப்படாத பெண்’ என்று கூறி, தன்னை தடுத்து நிறுத்திய கான்ஸ்டபிளை கன்னத்தில் அறைந்து விட்டடு தப்பி சென்றுள்ளார்.அவரது மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸார் இது தொடர்பில் விசாரணை நடத்தியபோது சந்தேகநபரான பெண் சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த பெண் நீண்ட காலமாக மனநல நோய்க்காக சிகிச்சை பெற்று வருபவரென வீட்டார் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை ஜாஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.