அங்கொட தெல்கஹாவத்தையில் உள்ள இரண்டு சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியில் 100,000 ரூபா பணத்துடன் 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லேரியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நால்வர் மாறுவேடத்தில் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி 20 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றி வளைத்து சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.