பெண்ணின் சடலம் மீட்பு

மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று சனி கிழமை மீட்கப்பட்டுள்ளது.

பெரிய சோளங்கந்த தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான தனலெட்சுமி (வயது – 49) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உடல் கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்