யாழ் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கிக்கு அருகாமையில் உள்ள ஒழுங்கையில் இன்று வெள்ளிக்கிழமை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் 5 அடி உயரமும் பொது நிறமான நரைத்த தலைமுடியுடன் காணப்பட்ட குறித்த சடலம் நீல நிற மேல் சட்டை மண்ணிற சேலை அணிந்த நிலையில் காணப்பட்டுள்ளதுடன் முற்பகல் 11-12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் அப்பகுதியில் குறித்த பெண் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்போது சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.