-கிண்ணியா நிருபர்-
பெண்கள், சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் பாலிய வன்முறைச் சம்பவங்களின் போது அதனை அணுகுவதற்கான செயல் முறை நிகழ்வொன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக கந்தளாயில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று சனிக்கிழமை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலையில் இயங்கி வரும் பெண்களுக்கான சுதந்திர அமைப்பான ஈ_வின்ங் (E_Wing) ஏற்பாடு செய்திருந்ததுடன், குறித்த திட்டமானது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பில், ஆசிய பவுண்டேசன் மற்றும் தேவை நாடும் மகளிர் ஆகியண இணைந்து அமுல்படுத்தி வருகிறது.
இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த கந்தளாய், சேருவில, தம்பலகாமம், மூதூர் ஆகிய பொலிஸ் நிலையங்களில் பெண்கள், சிறுவர் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைச் சம்பவங்களை பாலின அடிப்படையில் எவ்வாறு கையாள்வது மற்றும் பெண்களை வலுப்படுத்தல் அதன் அணுகு முறை தொடர்பிலும் பல விரிவான விளக்கங்கள் இதன் போது வழங்கப்பட்டன.
வளவாளராக சிரேஷ்ட சட்டத்தரணி திருமதி உதயனி தெவரப்பெரும கலந்து சிறப்பித்தார்.

