மத்திய லைபீரியாவில் பெட்ரோல் கொள்கலன் லொறி வெடித்ததில் 40 பேர் உயிரிழந்ததாக மேற்கு ஆபிரிக்க நாட்டின் தலைமை மருத்துவ அதிகாரி பிரான்சிஸ் கேட்டே நேற்று புதன் கிழமை தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை பெட்ரோல் ஏற்ற கொண்டு வந்த கொள்கலன் லொறி திடீரென விபத்துக்குள்ளாகி பெட்ரோல் கொள்கலன் லொறி வெடித்துச் சிதறியதில் சம்பவ இடத்தில் கூடியிருந்த பலர் உயிரிழந்ததுடன் பெரும்பாலானோர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்னும் பலர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகின்றது.