ரஷ்யாவை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் பூனை குட்டி என நினைத்து கருஞ்சிறுத்தை ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
விக்டோரியா சைபீரிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த பூனைக்குட்டி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். அதனை அங்கேயே விட்டு சென்றால் உயிரிழந்து விடும் என்று நினைத்து வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார்.
நாட்கள் போக போக லோனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணத் தொடங்கியதையடுத்து அது பூனைக்குட்டி இல்லை சைபீரியன் ஜூவில் பிறந்த லூனா என்று கருஞ்சிறுத்தை குட்டி என்று தெரிய வந்துள்ளது.
இருந்தும் அதன் மீது தான் கொண்ட பாசத்தால் பிரியாமல் கூடவே வைத்துள்ளார்.
மேலும் அந்த சிறுத்தைக்காக @Luna_the_pantera என்ற பெயரில் டிக்டாக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் லூனாவின் அன்றாட செயல்பாடுகளை வீடியோவாக பதிவிட்டு வந்தார். இந்த கருஞ்சிறுத்தை குட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
லூனா சிறு வயதில் இருந்தே வீட்டிலேயே வளர்ந்ததால், மற்ற சிறுத்தைகள் போல் இல்லாமல் மிகவும் சாந்தமான விலங்காக இருக்கிறது.
