ருவான்வெலிசாய மைதானத்தில் இடம்பெற்ற பூஜை நிகழ்வொன்றில் 3 பெண்களின் 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை பெண்ணொருவர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மூவரும் அநுராதபுரம், யட்டியந்தோட்டை மற்றும் ராகலை ஆகிய பகுதிகளை சேர்ந்த 70, 68, 58 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது இனந்தெரியாத பெண் ஒருவர் அருகில் வந்து கழுத்திலிருந்த நகைகளை தந்திரமாக அபகரித்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸாரிடம் 3 பெண்களும் முறைப்பாடு அளித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், இதுவரை சந்தேக நபர் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.