தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சைக்குரிய வகையில் கசிந்தமை தொடர்பில் மஹரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் தாள் தொடர்பான பிரச்சினை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பரீட்சைக்கு முன்னதாக, முதல் தாளில் உள்ள கேள்விகள் போன்ற கேள்விகள் அடங்கிய பயிற்சி தாள் ஒன்று தனியார் கல்வி நிறுவன ஆசிரியர் ஒருவரால் பரப்பப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரின் முறைப்பாடுகளுக்கு அமைய, பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.