இந்த வருடம் நடைபெறவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வழமை போன்று நடைபெறும் எனவும், இந்த வருடமும் வினாத்தாள் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம் கொண்டு வரப்படும் என கருத்துக்கள் எழுந்தாலும், எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களில் அது மேற்கொள்ளப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு, 2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதுடன் வருடாந்தம் 300,000 பரீட்சார்த்திகள் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.