புற்று நோயாளர் ஒருவரின் வங்கிக் கணக்கிற்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய பணத்தை மோசடி செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்களும் இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்
அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரும், ஜா எல – நிவந்தம பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பெண்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடுவெல பிரதேசத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்த 38 இலட்சம் ரூபா பணம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து சில குழுவினால் மோசடியாக எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே இந்த உண்மைகள் தெரியவந்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.