புற்று நோயாளர்கள், இதய நோயாளர்கள் மற்றும் வலிப்பு நோயாளிகளுக்கான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக, அரசாங்க மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தனியார் மருந்தகங்களில் மருந்துகளின் விலைகள் சுமார் 300 வீதத்தால் அதிகரித்துள்ளதாக, அதன் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்துள்ளார்.
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளால் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.