அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் புறவாழ்க்கையை கைவிட்டு காட்டுக்குள் வாழ முயன்று உயிரிழந்துள்ளனர்.
ரெபெக்கா வான்ஸ், அவரது 14 வயது மகன் மற்றும் ரெபெக்காவின் சகோதரி கிறிஸ்டின் ஆகிய மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
புறவாழ்க்கையை முற்றிலுமாகக் கைவிட்டு மாறுபட்ட வாழ்க்கை முறை ஒன்றைப் பின்பற்ற முயன்ற அவர்கள், இயற்கையோடு இணைந்து காட்டுக்கு உள்ளே அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பி ராக்கி மலைத்தொடரில் இருந்த தொலைதூர மலைப் பிரதேசத்திற்குச் சென்ற நிலையில் தொலைதூர மலை முகாம் ஒன்றில் இவர்களின் சிதைந்த உடற்கூறுகள் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இம்மூவரின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், உரிய பரிசோதனைகள் முடியும் வரை அதற்கான காரணத்தை வெளியிடப்பட மாட்டாது எனவும் மூவரின் மரணம் குறித்து விசாரித்து வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.