16 வருடங்களுக்குப் பின்னர்இ கண்டி தலதா மாளிகையில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புனித தந்ததாது கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது.
புனித தந்ததாது எனப்படும் புத்தரின் இடது பற்சின்னத்தை காண்பதற்கான அரிய வாய்ப்பை இதுவரையான காலப்பகுதியில் தலதா வழிபாட்டின் மூலம் பொதுமக்கள் பெற்றிருந்தனர்.
அதன்படி, இன்று மாலை 5.30 வரை புனித தந்ததாது கண்காட்சியினை யாத்திரீகர்கள் பார்வையிட முடியும்.
10 நாட்களாக இடம்பெறும் இந்த கண்காட்சியில் சுமார் 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டதுடன், இன்றைய தினமும் ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.