புத்தளம் – தில்லையடி ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி ஒருவர் இறந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு பயணம் செய்த பயணிகள் தொடருந்தில் மோதியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.