புத்தளத்தில் கடற் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி உபகரணங்களுக்கு இனந்தெரியாதோரால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆண்டிமுனை கடற் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இயந்திரப் படகுகள், வள்ளங்கள் மற்றும் மீன்படி வலைகள் என்பன தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.