-அம்பாறை நிருபர்-
அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மறுசுழற்சி நிலையத்தின் அருகில் குப்பை மலையாக காட்சியளித்த பிரதேசம் ‘க்ளீன் ஶ்ரீ லங்கா’ செயற்திட்டத்தின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றது.
அம்பாறை பிரதேசத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள், அங்குள்ள புத்தங்கல வனப்பகுதியில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டதன் காரணமாக அப்பகுதியில் குப்பை மலையொன்று உருவாகியிருந்தது.
இதற்கிடையே, குப்பை மலைக்கு யானைகள் உணவு தேடி வரத் தொடங்கியதன் காரணமாக அப்பிரதேசத்தின் ஊடான போக்குவரத்து பாதுகாப்பற்றதாக மாறியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான இச்சிரமதானம் தற்போது வரை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.