புத்தளம் – கற்பிட்டி தேதாவாடிய பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் இன்று செவ்வாய் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரியும் தும்மலசூரிய மற்றும் கற்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மண்வெட்டி, கோடரி உள்ளிட்ட பொருட்களும், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இதன்போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.