மொனராகலை தம்பகல்ல நாகொல்ல பிரதேசத்தில் புதையல் தோண்டிக்கொண்டிருந்த இருவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 20 மற்றும் 54 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் சந்தேகநபர்கள் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், தம்பகல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.