-பதுளை நிருபர்-
எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை புதையல் தோண்டிக்கொண்டிருந்த நபர் ஒருவர் பண்டாரவளை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்ல கரந்தகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டாரவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கரந்தகொல்ல காப்புக்காட்டில் சோதனை மேற்கொண்ட போது சந்தேகநபர் புதையல் தோண்டிக் கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இவரிடம் இருந்தது மண்வெட்டி போன்ற புதையல் தோண்ட பயன்படுத்தபடும் சில உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் பண்டாரவளை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்புதையல் தோண்டியவர் கைது