புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் டிப்பர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்த முற்பட்ட வேளை வாகனமும் அதன் சாரதியினையும் புதுக்குடியிருப்பு பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
கல்லாறு தர்மபுரத்தினை சேர்ந்த வாகன சாரதியே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் பகுதியில் இருந்து டிப்பர் ஒன்றில் சூட்சுமமான முறையில் பாலை மரக்குற்றிகளை கடத்தப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே.ஹெரத் தலைமையிலான பொலிஸாரால் கடத்தல் முறியடிக்கப்பட்டிருந்தது.
இதன் போது 5 இலட்சத்திற்கும் அதிகமான பாலை மரக்குற்றிகள் துண்டங்களாக அறுக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட பாலைமரக்குற்றிகள் மற்றும் டிப்பர் வாகனம் என்பவற்றையும் சந்தேக நபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிசார் ஈடுபட்டுள்ளார்கள்.