புதிய வற் வரித் திருத்தங்களுக்கு அமைய, நீர் கட்டணம் அதிகரித்துள்ளமையினால் பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கழிப்பறைகளை பயன்படுத்துவதற்கு இதுவரை வசூலிக்கப்பட்ட கட்டணம் பத்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 20 ரூபாயாக இருந்த கழிவறை கட்டணம் புதிய திருத்தத்தின் கீழ் 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.