ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் பெற்றுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று மாலை 4.00 மணிக்கு புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க 7 ஆவது தடவையாகவும் பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.