ராஜபக்சக்கள் இல்லாத அரசாங்கம் அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கடிதத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கு நினைவூட்டியுள்ளார்.
புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா இன்று சனிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், பொருளாதாரம் தொடர்பில் எடுக்கப்படும் சரியான தீர்மானங்களுக்கு புதிய அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் என பிரதமரிடம் அறிவித்துள்ளார்.