புதிதாக நியமனம் பெற்ற இளம் தாதி பரிதாபமாக உயிரிழந்த சோகம்

புதிதாக நியமனம் பெற்ற இளம் தாதி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் பண்டாரவளை மகுல்லெல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய இளம்பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த தாதி நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிந்து விட்டு வீடு திரும்பும் போது திடீரென சுகவீனமடைந்துள்ளார். அதன்பின் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாதி ஒரு மாதத்திற்கு முன்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவினட அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தனது புதிய நியமனத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.