வவுனியாவில் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
34 வயதுடைய மதாவாச்சியை சேர்ந்த வைத்தியர் , 38வயதுடைய வவுனியா மணிபுரம் பகுதியை சேர்ந்த நபர் மற்றும் வவுனியா கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 31வயதுடைய இளைஞர் ஆகிய மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட ஸ்கேனர் இயந்திரம் மற்றும் அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இவர்கள் விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.