கொழும்பு – பம்பலப்பிட்டி பகுதியில் தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் புகையிரதத்தில் தவறுதலாக மோதியுள்ளாரா அல்லது புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.