-கிரான் நிருபர்-
வெலிகந்தை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை புகையிரதம் பிக்கப் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் வடமுனையில் இருந்து வெலிக்கந்தை நோக்கி வந்த பிக்கப் வாகனத்துடன் வெலிக்கந்த புகையிர கடவையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர் ஆபத்தான நிலையில் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிசிக்கைக்காக பொலநறுவை வைத்தியசிலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் .
பொலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.


