புகைத்தல் மற்றும் போதைக்கு எதிரான வீதி நாடகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன் கிழமை மகிளுர் பொதுமைதானத்தில் இடம்பெற்றது.
மேலும் மகிளுர்முனை சக்தி வித்தியாலயத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகி மகிளுர் பொதுமைதானத்தில் நிறைவடைந்தது.
இதன்போது சட்ட விரோத மது உற்பத்திக்கு எதிராகவும் அதன் பாதிப்பு தொடர்பான வீதி நாடகம் தென் எருவில் பற்று சமூர்த்தி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் இனணந்து நடாத்தியிருந்தனர்.
இதில் தென் எருவில் பற்று பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் மகிளுர்முனை சக்தி வித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்கள், மகிளூர் சரஸ்வதி வித்தியாலய மாணவர்கள, ஆசிரியர்கள், பொதுமக்கள், சமூர்த்தி பயனாளிகள் என பெரும் திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
