பீடி ஒன்றின் விலையை 4 ரூபாவினால் அதிகரிக்குமாறு பீடி உற்பத்தி தொழில்துறையினர் கோரியுள்ளதாக கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மதுவரித் திணைக்கள ஊடகப் பேச்சாளரும், மேலதிக மதுவரி ஆணையாளருமான கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பீடியின் விலையை அதிகரிக்க அந்தத் தொழிற்துறையினருக்கு சட்ட ரீதியான தடை எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் இன்று புதன் கிழமை முதல் ஒரு மாத காலத்திற்கு மதுவரித் திணைக்கள அதிகாரிகளை வழமையான சேவையில் இருந்து விலக்கி புகையிலை கைத்தொழிலை ஒழுங்குமுறைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுத்த மதுவரித் திணைக்கள ஆணையாளர் தீர்மானித்துள்ளார்.