டிசம்பர் மாதம் நடத்தப்பட இருந்த கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2023ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட்டதை கருத்திற்கொண்டு, சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் மே மாதம் வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் சரியான திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டு முதல் பரீட்சைகள் வழமை போன்று திட்டமிடப்பட்ட திகதிகளில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.