யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களில் 5 பேர் இன்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த சனிக்கிழமை, குறித்த பேருந்து நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த 150க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றுகூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.குறித்த இளைஞர்களின் செயற்பாடானது பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்து, யாழ்ப்பாண பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் அன்றைய தினமே 2 பேர் கைது செய்யப்பட்டதுடன் இன்று 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.