யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று வெள்ளி கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனைக்கோட்டை பழம் வீதி பகுதியில் நீண்ட காலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.