கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பாடசாலை மாணவியொருவர் நேற்று செவ்வாய்கிழமை மாலை உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் பிரபல பெண்கள் பாடசாலையொன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் சுரேந்திரன் கவிதா (வயது – 15) என்ற மாணவியை உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி பிரத்தியேக வகுப்புக்குச் செல்வதற்காக ஆடையை சீர்செய்ய மின்னழுத்தியைப் பயன்படுத்தியபோதே மின்சாரம் தாக்கிக் குறித்த மாணவி உயிரிழந்துள்ளார்.
மாணவியின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.