மஹியங்கனை பிரதேசத்தில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த16 கிராம் 710மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி கன்னோருவ பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மஹியங்கனை பிரதேசத்திற்கு லொக்கேஷனல் முறையில் போதைப்பொருள் விநியோகம் செய்து வருவதாகவும் இதற்காக இலங்கை வங்கிக்கு சொந்தமான கணக்கை பயன்படுத்தி, அந்த கணக்கில் பணம் செலுத்தி, உத்தரவு வந்த பின்னர் கண்டி, பேராதனை, கன்னோருவை, கெலிஓயா, ஹெட்டிபொல, வில்கமுவ ஆகிய பகுதிகளில் ஹெரோயின் விற்பனை செய்வதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேகநபர் கைதுசெய்யப்பட்ட போது, அவரிடம் இருந்த போதைப்பொருளுக்கு மேலதிகமாக, சிறிய டிஜிட்டல் தராசு, மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைதுசெய்யப்பட்டவரை விசாரணைகளின் பின்னர் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.