பிரதமர் அலுவலகத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து, ஹிரு நியூஸ் வெளியிட்ட தவறான செய்தி அறிக்கை தொடர்பாக பொலிஸார் குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்ததாகக் கூறும் செய்தி குறித்து விசாரிக்க, பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் அலுவலகம் குறித்த செய்தியை நிராகரித்ததுடன், ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.