கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு எதிராக நபர் ஒருவர் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 26 ஆம் திகதி குழந்தை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தனது மனைவிக்கு 27 ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் இறந்த நிலையில் குழந்தை பிறந்ததோடு, தனது மனைவியின் கர்ப்பப்பையும் அகற்றப்பட்டுள்ளது. இது மருத்துவர்களின் தவறுகளின் காரணமாக இடம்பெற்றது எனத் தெரிவித்து இராஜதுரை சுரேஸ் என்பவர் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய் கிழமை முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்துள்ளார்.