அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த கடற்படை வீரரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை இருவர் திருடிச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
ரயில் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த கடற்படை வீரருக்கு அவ்வழியாக சென்ற இருவர் பியரை குடிக்க கொடுத்த நிலையில் குறித்த நபர் பியரை குடித்து விட்டு தூங்கிய போது அவரிடமிருந்து தங்க சங்கிலி, கையடக்கத் தொலைபேசி மற்றும் 2000 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக குறித்த கடற்படை வீரர் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.