இந்தியாவில் 8 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவிகள் 3 பேர் கொரியா செல்ல முயற்சித்துள்ளனர்.
கரூர் மாவட்டம் தான்தோணிமலை பகுதியில் உள்ள அரசுப் பாடசாலையில் 8ஆம் வகுப்பில் படிக்கும் மூன்று மாணவிகள் மாணவிகளில், கடந்த 4ம் திகதி பாடசாலை விட்டு வீடு திரும்பவில்லை என மாணவிகளின் பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் முக்கிய பொது இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிரிவி கமெராக்களை, ஆய்வு செய்தனர். இதன் போது 3 சிறுமிகளும் காட்பாடி ரயில்வே நிலையத்தில் சுற்றித் திரிந்தது தெரியவந்தது. அதனை அடுத்து காணாமல் போன 3 சிறுமிகளையும் பத்திரமாக மீட்டனர்.
அவர்களை பொலிஸார் விசாரித்த போது, கொரியாவில் பிரபல பிடிஎஸ் (BTS) இசைக்குழு மீதான ஆர்வத்தால், அவர்களது இசைக்கச்சேரியை பார்ப்பதற்காக கொரியா செல்ல முயற்ச்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.