நவகமுவ மொமிரி ராஸ்ஸபான பிரதேசத்தில் விகாரையின் பெயரில் நடத்தப்பட்ட வீட்டுக்குள், பௌத்த தேரர், யுவதி மற்றும் பெண்ணொருவரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எட்டுப்பேரையும் நேற்று புதன் கிழமை கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களது விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவினை நீதவான் ஷாமினிமா விஜேபண்டார பிறப்பித்துள்ளார்.
அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில்இ சந்தேகநபர்கள் எட்டுப்பேரில் எழுவரை சாட்சியாளர்கள் இருவர் அடையாளம் கண்டுப்பிடித்தனர். ஒருசாட்சியாளரை எவரும் அடையாளம் காட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.