-கிரான் நிருபர்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிண்ணையடி துறையினூடாக செல்லும் பிரம்படித்தீவு முருங்கன்தீவு மற்றும் பெண்டுகள் சேனை பூலாக்காடு போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து சிரமமாக காணப்படுகின்றது.
கடந்த பல நாட்களாக ஏற்பட்ட அடைமழை காரணமாக குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக தோணி(வள்ளம்) போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகத்தினால் தற்காலிகமாக இயந்திர படகு சேவை இடம்பெற்று வருகின்றன பிரதேச செயலகத்தினால் வழங்கப்படும் எரிபொருள் மக்களின் போக்குவரத்துக்கு போதாத காரணத்தினால் அப் பாதையின் போக்குவரத்துக்காக பயன்படுத்தும் மக்களிடம் எரிபொருளுக்காக கட்டணம் அறவிடப்பட்டது.
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பொருளாதார கஷ்டத்தை அனுபவித்து வரும் நிலையில் அங்குள்ள மக்களின் வேண்டுதலுக்கு இணங்க சில தினங்களுக்கு போக்குவரத்திற்கு தேவையான எரிபொருளை பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நேற்று ஞாயிற்று கிழமை இயந்திர படகினை நிர்வாகம் செய்யும் பிரம்படித்தீவு கிராம அபிவிருத்தி அமைப்பினரிடம் வழங்கி வைத்தார்.

