பால்மா பொதியின் விலை மேலும் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மா பொதியின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், 400 கிராம் பால்மாவின் விலை 1,020 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் பால்மா பொதியொன்றின் விலை 2, 545 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.